மக்களே உஷார்! கேரளாவிலும் தமிழகத்திலும் ஜூன் 4ம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்பு!!
kerala and tamilnadu june 4 heavy rain alert
கேரளாவில் இன்று முதல் ஜூன் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் நாளை முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி ,நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பல்வேறு பகுதிகளில் கனமழையும் கடந்த வாரத்தில் கொட்டிதீர்த்தது. சென்னையில் மழை அவ்வபோது லேசான முதல் மிதமான மழை பெய்துவந்தது.
கேரளாவில் மே மாதம் தொடக்கத்திலிருந்தே கனமழை பெய்து வருகிறது. மேகவெடிப்பு காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிககனமழையும் பெய்தது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியது.
சமீபத்தில், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெப்பத்தின் அளவு 2 முதல் 3 சென்ஷியஸ் உயரும் என்று தகவல் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து , திருத்தணி, சென்னை மீனம்பாக்கம், ஈரோடு ,சேலம் போன்ற நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்ப அலை வீசியது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 4 வரை கனமழைக்கு வாய்ப்பு. கேரளாவில் தென்மேற்கு மழை இன்று தொடங்குவதால் ஜூன் 4 ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
kerala and tamilnadu june 4 heavy rain alert