அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!!
Low pressure area has formed over the Arabian Sea
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையானது முன்கூட்டியே மே மாதம் இறுதி வாரத்தில் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்குகிறது. அதன்படி ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
கடந்த சில நாட்களாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதேபோன்று தமிழகத்திலும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும் ஜூன் 7-ம் தேதிக்குள் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
English Summary
Low pressure area has formed over the Arabian Sea