வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுத வலுப்பெற்றது!!
low pressure formed in Bay of Bengal has strengthened
மத்திய மேற்கு வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா ஒட்டிய கடற்கரையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ் பகுதி உருவான நிலையில் தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு_வடமேற்கு திசையில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னல் எனக்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டம் அவிலாஞ்சியில் 38 செ.மீ, அப்பர் பவானியில் 10.5 செ.மீ, தேவாலாவின் 9.3 செ.மீ சேரங்கோட்டில் 9 செ.மீ, பந்தலூரில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
low pressure formed in Bay of Bengal has strengthened