அரபிக் கடலில் உருவாகும் தீவிர புயல் - தமிழகத்தில் பாதிப்பா?
meterological centre warns taminadu for cyclone tej
அரபிக் கடலில் உருவாகும் தீவிர புயல் - தமிழகத்தில் பாதிப்பா?
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி வருவதை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என்றும், வரும் 22ம் தேதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ’தேஜ்’ என்று பெயர் சூட்டப்படும் இந்த புயலால் மும்பை உள்ளிட்ட கடற்கரையோர நகரங்கள் கடும் சேதத்தை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தேஜ் புயல் காரணமாக, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
meterological centre warns taminadu for cyclone tej