அதி தீவிர புயலாக வலுவடைந்தது ‘மோக்கா'..!
Mocha has strengthened into a very intense storm in bay of Bengal
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மோக்கா புயலாக வலுப்பெற்றது. இந்நிலையில் மோக்கா புயல் தற்பொழுது அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து புயல் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.
மேலும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மோக்கா புயலின் நகரும் வேகம் தற்பொழுது 7 கிலோமீட்டர் இங்கிருந்து 9 கிலோமீட்டராக வேகம் அதிகரித்து நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Mocha has strengthened into a very intense storm in bay of Bengal