#BREAKING || அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது "மோக்கா"..! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Mocha is crossing the coast today as an intense storm
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயலானது நேற்று முன்தினம் மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இது போர்ட் பிளேயருக்கு வட-வடமேற்கில் 610 கிலோமீட்டர் தொலைவிலும், காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 510 கி.மீ மற்றும் சிட்வே (மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு உள்ளது.
இந்நிலையில், மோக்கா புயலானது இன்று வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 210 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
English Summary
Mocha is crossing the coast today as an intense storm