இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! - Seithipunal
Seithipunal


இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 7-ம் தேதி வரை தென் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். 8-ம் தேதி வரை இலங்கை கடலோர பகுதிகள், அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new air pressure form in bay of bengal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->