மீண்டும்,மீண்டுமா..இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுசேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி ,நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பல்வேறு பகுதிகளில் கனமழையும் கடந்த வாரத்தில் கொட்டிதீர்த்தது. சென்னையில் மழை அவ்வபோது லேசான முதல் மிதமான மழை பெய்துவந்தது.

சமீபத்தில், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெப்பத்தின் அளவு 2 முதல் 3 சென்ஷியஸ் உயரும் என்று தகவல் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து , திருத்தணி, சென்னை மீனம்பாக்கம், ஈரோடு ,சேலம் போன்ற நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்ப அலை வீசியது.

இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுசேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next 4 days tamilnadu and puducherry rain alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->