வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை! 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை.!
Nine Ports put up cyclone warning signals in tamilnadu
வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதை அடுத்து இன்று அல்லது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து தூத்துக்குடி, சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, எண்ணூர், பாம்பன், காரைக்கால், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் காற்றின் வேகம் 60 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்பதால் மீனவர்கள் பத்தாம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Nine Ports put up cyclone warning signals in tamilnadu