மக்களே உஷார் - தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.! - Seithipunal
Seithipunal


ரீமால் புயல் வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த ஆறு நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வபோது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மாதம் 1ம் தேதி இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.               


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in tamilnadu till june 1


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->