அடர் பனி பொழிவால் ரெட் அலர்ட்... மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்பொழுது குளிர் காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் மற்றும் அடர் பனி காணப்படுகிறது. இதன் காரணமாக சண்டிகர் நகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

சண்டிகரில் கடும் குளிர் மற்றும் அடர்ந்த மூடு பணி காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அவசிய காரணங்களுக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகத்தை மறைத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள சில நகரங்களுக்கு கடும் குளிர் மற்றும் அடர் மூடுபனி காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் மற்றும் அடர் மூடுபனி காரணமாக பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red alert due to heavy snow fall in Chandigarh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->