கேரளாவில் இன்று 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம்.!
Red alert for 4 districts in Kerala
கேரளாவில் கனமழையால் இன்று 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் வருகிற 9-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கனமழையால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கோட்டயம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் நிலச்சரிவு, மண்சரிவு போன்றவை ஏற்பட கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் கேரளா அரசின் கோரிக்கையடுத்து, கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 125 வீரர்கள் அடங்கிய 5 குழுக்கள் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Red alert for 4 districts in Kerala