சூறாவளி காற்றுடன் கரையை கடக்க தொடங்கியது "மோக்கா புயல்"..!
Storm Mocha began to cross the coast with hurricane force winds
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர மோக்கா புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்ப்யு (மியான்மர்) இடையே, சிட்வே (மியான்மர்) க்கு அருகே கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புயலானது மணிக்கு 180 கி.மீ. முதல் 190 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 210 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது, வடக்கு மியான்மர்-வங்காளதேசக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது என்றும், சுழல் பட்டை கடலோரப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மோக்கா புயலானது நிலச்சரிவை ஏற்படுத்தும் என்பதால் வங்காளதேசம் மற்றும் மியான்மரில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
English Summary
Storm Mocha began to cross the coast with hurricane force winds