வங்கக் கடலில் நாளை உருவெடுக்கிறது "மோக்கா புயல்".! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Storm Mocha in the Bay of Bengal tomorrow
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வதுபெறக்கூடும். இதையடுத்து 11ஆம் வரை வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் நாளை 70 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Storm Mocha in the Bay of Bengal tomorrow