24, 25-ம் தேதி புயல்! தமிழகத்திற்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரின் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பெங்களூரில் மழை நீடிக்கும். 

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் மட்டும் சென்னையில் 350 மி.மீட்டரை கடந்தும், தமிழ்நாடு முழுவதும் 150.மி.மீட்டரை தாண்டியும் மழை பொழிந்துள்ளது. 

இது கடந்த காலங்களில் அக்டோபர் மாதத்தில் பெய்யும் மழையை விட 70% அதிகம். 

சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் 

அக்டோபர் 24, 25 தேதிகளில் வரவுள்ள புயல் ஒடிசா கடற்கரையை நோக்கி செல்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது” என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu wather man Weather Update Cyclone alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->