வட தமிழ்நாட்டில் வெப்ப அலை.. வானிலை மையம் எச்சரிக்கை.!!
TamilNadu weather forecast and alerts 17042024
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணை பகுதி மற்றும் தென்காசியில் தலா ஒரு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை கொடுத்த வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது.
வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 20ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவு கூடும் என்பதால் இயல்பை விட வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக காற்றின் ஈரப்பதம் குறைந்து ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
மேலும் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழக உள் மாவட்டங்களில் ஊரில் இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மேகமூட்டம் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
TamilNadu weather forecast and alerts 17042024