தமிழகத்தில் என்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Tamilnadu Weather Report Chennai IMD
தமிழகத்தில் என்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று மழை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வருகின்ற 22 ஆம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வருகின்ற 23ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu Weather Report Chennai IMD