இன்னும் 2 நாட்கள் தான்.. வட தமிழ்நாட்டு மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை அனேக இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளது. அதேபோன்று வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஊரில் இடங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருந்தது. 

இதனால் உள் மாவட்டங்களில் 10 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. 

இந்த நிலையில் இன்று முதல் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை மாற்றம் ஏதும் இல்லாமல், அதுக்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆனால் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை வெப்ப அலை வீச கூடும் எனவும், அடுத்த ஐந்து நாட்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் ஈரப்பதம் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும் மற்ற நேரங்களில் 40 முதல் 70% ஆகவும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 80 சதவீதமாகவும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temprature will reduce within 2 days in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->