இனி மேல் தான் ஆட்டம் ஆரம்பம்!...வங்கக்கடலில் உருவாகுகிறது குறைந்த காற்றழுத்தம்!...எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடந்த மாதம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழகத்தின் உள்ள மாவட்டங்கள் மற்றும் தென் , வட மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 6 அல்லது 7-ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும்,  8, 9-ம் தேதிகளில் உருவாகக்கூடும் என்று  தெரிவித்தது.

தொடர்ந்து நேற்று உருவாவதற்கான சூழல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் உருவாகவில்லை.

மேலும், மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The game has just begun low pressure is forming in the bay of bengal warning has been issued by indian weather


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->