வானிலை எச்சரிக்கை : தமிழகத்தில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!...வெளுத்து வாங்கப்போகும் கனமழை! - Seithipunal
Seithipunal


தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று  பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது  தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று  பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் 26-ந்தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட இலங்கை-டெல்டா மாவட்டங்களுக்கு இடையே நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அங்கு 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை ஒரே இடத்தில் நிலவக்கூடும். அது தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weather alert a new low pressure area is forming in tamil nadu today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->