10 மாவட்டங்களுக்கு... ''மஞ்சள் எச்சரிக்கை'' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களுக்கு வருகின்ற 25ஆம் தேதி உயர் வெப்ப நிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட இரண்டு டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி கடந்த 19ஆம் தேதி ஈரோட்டில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இதற்கிடையே அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weather report 23042024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->