வங்க கடலில் சுழற்சி! தீவிரம் காட்டுகிறதா வடகிழக்கு பருவமழை? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!
Weather report and alerts 25102023
வங்க கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான புயல்கள் கரையை கடந்த நிலையில் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தென் ஆந்திரா கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் வரும் அக்டோபர் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆனால் வரும் அக்டோபர் 29ஆம் தேதி வாக்கில் சென்னை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன் தொடர்ச்சியாக ஒரு அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் நிலவுவதால் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Weather report and alerts 25102023