இன்று கெர்ப்போட்ட நிவர்த்தி.. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. வாங்க தெரிஞ்சுக்கலாம்..! - Seithipunal
Seithipunal


கெர்ப்போட்ட நிவர்த்தி...!! 
 தினசரி காலண்டரில் கெர்ப்போட்ட நிவர்த்தி என்பதை நாம் கவனித்திருப்போம். நாம் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லாம் அரசு விடுமுறை, பண்டிகை நாட்கள் என்பதை பார்க்கும்போது அதில் 'கெர்ப்போட்ட நிவர்த்தி" என்பதை கவனித்து இருப்போம்.

 இது ஏதும் விசேஷ தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல. உண்மையில் இது, தமிழர்களின் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை ஆகும்.

 அதாவது 'கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று 'கெர்ப்போட்டம்" என்று மருவியுள்ளது.

 தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்டே சூரிய வழி மாதங்கள் பின்பற்றப்படுகிறது.

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும், பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.

 அவ்வகையில் தனுர் மாதம் எனப்படும் மார்கழியில், சூரியன் தனுர் ராசி மண்டலத்தை கடக்கும்போது, பூராட நட்சத்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்துக் கொள்கிறது.

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம். இந்த பதினான்கு நாட்களும் கெர்ப்போட்ட நாட்கள் ஆகும்.

 அதாவது, மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள். அவ்வகையில் இந்த கெர்ப்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால், ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப்பொழியும் அளவும் முறையாக இருக்கும். இந்த கெர்ப்போட்ட நாட்கள் தோரயமாக டிசம்பர் 29-ம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை அமைகிறது. 

 மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் கெர்ப்போட்ட நாட்கள் என்று நினைவில் வைத்துக்கொள்வார்கள். 

 இந்நாட்களில் லேசான தூறல், மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கருக்கட்டி இருக்கிறது என்று பொருள். 

எனவே அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். மாறாக கெர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ, கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள். 

எனவே மார்கழியில் கனமழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம். இந்த கெர்ப்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (ஆற்றுஃஏரிப்பாசனம் இல்லாத வானம் பார்த்த பூமியில் விளையும் பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள்.

 சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு முன்னால் பூமியின் அச்சு அசையாமல் இருக்கும். இதுதான் கெர்ப்போட்டம்.

 நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கெர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தையும் கிழிக்கிறோம்.

புதுமையின் மோகத்தில் எத்தனை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்...!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is the meaning of kerpotta nivarthi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->