தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!
What is the report of Chennai Meteorological Centre
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

வானிலை:
இதைத்தொடர்ந்து 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2°- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் 24ம் தேதி மற்றும் 25ஆம் தேதி தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை:
இது தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 22 °-23° ஒட்டியும், அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸ் ஒட்டியில் இருக்கக்கூடும். இதைத்தொடர்ந்து நாளை, காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.மேலும் நாளை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 22°-23° செல்சியஸை ஒட்டியும், அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
What is the report of Chennai Meteorological Centre