மலையின் உச்சி பகுதி ஏன் குளிர்கிறது? ஓ... அதற்க்கு இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தரைப்பகுதியில் உள்ள வெப்பத்தின் அளவும், மலையின் உச்சி பகுதியில் உள்ள வெப்பத்தின் அளவும் வெவ்வேறாக இருக்கின்றன. இதற்கான காரணத்தை பார்ப்போம்.

வளிமண்டலத்தில் 5 அடுக்குகள் உள்ளன. 
 
*வெப்ப மண்டலம்   
*அடுக்கு மண்டலம் 
*இடைக்கோளம்       
*தெர்மோஸ்பியர்     
*வெளிக்கோளம்      

வளிமண்டலத்தின் வெப்ப மண்டலத்திற்கு மேல் செல்ல செல்ல 1000 மீட்டருக்கு 6.5 டிகிரி செல்சியஸ் குறைகிறது. இதனால் வெப்பநிலை அளவு குறைந்துகொண்டே செல்லும்.

பூமிக்கு வெப்பம் எப்படி கிடைக்கிறது? 

சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் 100 அலகு வெப்பத்தில் 51 சதவீதம் மேகங்கள் மற்றும் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு வெளியில் சென்றுவிடுகிறது. மீதமுள்ள 49 சதவீதம் வெப்பம் தான் பூமியை வந்தடைகிறது. இதனால் தரையில் இருக்கும் நம்மை வெப்பம் அதிகமாக தாக்குகிறது. 

மேல் பகுதியில் ஏன் வெப்பம் குறைவாக இருக்கிறது?

மேல் பகுதியில் அழுத்தம் குறைவாக இருப்பதோடு காற்றும் விலகி இருக்கும். இதனால் தரையிலிருந்து மேலே செல்ல செல்ல வெப்பநிலையானது படிப்படியாக குறைய தொடங்குகிறது. இதன் காரணமாக தான், 1000 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகளில்  இருக்கும் நபர்களுக்கு வெப்பநிலை குறைவாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why hills are Cool


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->