தொடரும் கனமழை: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தொடரும் கனமழையால் கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் பருவமழை வலுப்பெற்றதை அடுத்து வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை மையம் கேரளாவிற்கு இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களில் இன்று முதல் 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை பலத்த மழை பெய்ய கூடும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரளா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும் மீனவர்கள் இந்த காலகட்டத்தில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yellow alert warning for 11 district in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->