பட்டமளிப்பு விழாவில் தாக்குதல் - 112 பேர் பலி; 112 பேர் படுகாயம்.!  - Seithipunal
Seithipunal


பட்டமளிப்பு விழாவில் தாக்குதல் - 112 பேர் பலி; 112 பேர் படுகாயம்.! 

சிரியா நாட்டின் ராணுவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 112 பேர் உயிரிழந்தனர். 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பயங்கரவாதிகள் காரணம் என்று சிரிய ராணுவம் குறை கூறியது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், சிரிய ராணுவம் முழுவீச்சில் பதிலடி கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

அதாவது, கிளர்ச்சியாளர்கள் உள்ள இட்லிப் பகுதியைக் குறிவைத்துப் பதில் தாக்குதல் நடத்தப்போவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் வருத்தம் தெரிவித்தார்.

இட்லிப் வட்டாரம் ஹயாட் அல்-ஷாம் (Hayat al-Sham) என்ற கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது. அவர்கள் இதற்குமுன் ஆளில்லா விமானங்கள் மூலம் அரசுக்கு சொந்தமான இடங்களைத் தாக்கியிருக்கின்றனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

112 peoples died for attack in syria army college convocation function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->