லிபியாவை புரட்டி போட்ட டேனியல் புயல் - 11,300 பேர் பலி.!  - Seithipunal
Seithipunal


லிபியாவை புரட்டி போட்ட டேனியல் புயல் - 11,300 பேர் பலி.! 

மத்தியதரைக் கடலில் கடந்த ஞாயிற்று கிழமை டேனியல் புயல் உருவானது. இந்த புயால் கடலை ஒட்டி அமைந்துள்ள வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவைக் கடந்தது. அதனால், அங்கு கன மழை கொட்டி தீர்த்ததோடு, சூறாவளிப்புயலும் தாக்கியது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் ஓடும் வாடி டொ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 

இந்த வெள்ள நீா் அருகிலுள்ள டொ்ணா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் பாய்ந்து வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை கடலுக்கு அடித்துச் சென்றது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,300-ஆக உயா்ந்துள்ளது. 

மேலும், 10,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது, "கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் சர்வாதிகாரி கடாஃபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் அங்கு, ஆயுதமேந்திய குழுக்களின் மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

இதனால், அந்நாடு கிழக்கு, மேற்கு என்று இரண்டு பிரிவுகளாக ஆளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் உள்கட்டமைப்புகளை சீரமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதுவே, வாடி டொ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைகள் தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11300 peoples died in libiya for deniyal storm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->