பாகிஸ்தானில் தீவிரமடையும் போராட்டம்.! தலைநகரில் 144 தடை உத்தரவு
144 implemented in capital as protest intensity in Pakistan
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், அல்-காதர் அறக்கட்டளை உட்பட அவர் மீது தொடரப்பட்ட 120 ஊழல் வழக்குகள் விசாரணைக்காக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது துணை ராணுவத்தினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மேலும் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டு 8 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இம்ரான் கானின் ஆதரவாளர்கள் மற்றும் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்தவர்கள் தலைநகரம் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் பாலுசிஸ்தான் மாகணங்களில் போராட்டங்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இல்லம் மற்றும் பிரதமரின் மாடல் டவுன் லாகூர் இல்லத்திலும் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைக்கும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இதுவரை காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
English Summary
144 implemented in capital as protest intensity in Pakistan