குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து - கேரள தம்பதி உட்பட 17 பேர் பலி - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெய்ரா சுற்றுப்புறத்தின் அல் முரார் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியின் 4வது மாடியில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது ஐந்தாவது மாடிக்கும் வேகமாக பரவியதில் தளம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகின.

இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட தளத்திலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்நிலையில் இந்த பயங்கர தீ விபத்தில் கேரளாவின் மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கலங்கந்தன் ரிஜேஷ் மற்றும் அவர் மனைவி ஜிஷி புகை மூட்டத்தில் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களின் உடலை கேரளாவிற்கு கொண்டு செல்ல இந்திய தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த விபத்தில் சூடான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 14 பேர் மற்றும் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதுகாப்பு குறைபாட்டினால் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கு முக்கிய காரணம் என முதல் கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 died in fire accident in Dubai residential building


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->