மத்திய மெக்சிகோவில் அகதிகள் சென்ற பேருந்து விபத்து - 17 பலி, 13 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மத்திய மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிகோ தெற்கு மாநிலமான ஓக்ஸாகாவிலிருந்து வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் 45 பேர் பேருந்தில் அமெரிக்கா எல்லை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது மத்திய மெக்சிகோ மாநிலமான பியூப்லாவில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயேயும், இருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லையை அடைய சட்டவிரோதமாக டிரக்குகள் மற்றும் பேருந்துகளை அடிக்கடி பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துகின்றதால் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக கடந்த 2021ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற டிரக் தெற்கு நகரமான டக்ஸ்ட்லா குட்டிரெஸ் அருகே கவிழ்ந்த விபத்தில் 56 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 killed and 13 injured Refugee bus crashes in central Mexico


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->