நைஜீரியாவில் லாரியுடன் நேருக்கு நேர் மோதிய 2 பேருந்துகள்.! 19 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் புறநகர் பகுதியான யாங்கோஜி-குவாக்வாலாடா சாலையில் லாரியுடன் இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்து மோதியதில் தீ பற்றி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

அபுஜாவில் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து அதன் முன்னால் உள்ள வாகனத்தை கடக்க முயன்ற பொழுது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நேர் எதிர் திசையில் வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது.

மேலும் பேருந்திற்கு பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் லாரி மீது மோதியதால் தீ பற்றி எரிந்து 3 வாகனங்களும் தீயில் கருகின. இந்த பயங்கர விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 18 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிக வேகத்தில் சென்றதும் மற்றும் சாலை விதிகளை மீறியதே விபத்திற்கான காரணம் என்று காவல்துறையை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 died in two buses collide with truck in nigeria


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->