பத்தொன்பது பயணிகளை இறக்கிவிட்டுச் சென்ற விமானம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பத்தொன்பது பயணிகளை இறக்கிவிட்டுச் சென்ற விமானம் - நடந்தது என்ன?

கடந்த ஐந்தாம் தேதி ஸ்பெயின் நாட்டில் இருந்து லிவர்பூல் நகருக்கு ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில், அங்கு தட்பவெப்ப நிலை மாறியதால் கடும் காற்று வீசியது. இதனால், விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

விமானத்தில் பயணிகள் முழுவதுமாக இருந்ததால், அங்கு நிலவிய காலச்சூழலுக்கு விமானம் டேக் ஆப் ஆவது கடினம் என்பதை உணர்ந்த விமானி, விமான நிறுவனத்திடம் பயணிகளில் 20 பேர் இறங்கினால் எடை குறைந்து விமானம் சிக்கல் இல்லாமல் டேக் ஆப் ஆகிவிடும் என்றுத் தெரிவித்தார். 

பின்னர் விமானத்திலிருந்து யார் இறங்க வேண்டும் என்பதை பயணிகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்று பயணிகளிடம் விமானி கோரிக்கை விடுத்தார். 
மேலும், விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும், ஊக்கத்தொகையாக 500 யூரோக்கள் அளிக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்தது. 

இதையடுத்து பயணிகளில் பத்தொன்பது பேர் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு சம்மதம் தெரிவித்து கீழே இறங்கினர். இதைத்தொடர்ந்து, விமானம் இரண்டு மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு பத்திரமாக டேக் ஆப் ஆகி புறப்பட்டுச் சென்றது. 

இந்த சம்பவம் குறித்து விமானம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வானிலை நிலைக்கு ஏற்றவாறு விமானத்தின் எடையில் சில வரைமுறைகள் கொண்டு வருவது வழக்கமான நடைமுறைதான். பாதுகாப்பு காரணங்களுக்காக இதே முறையை தான் அனைத்து விமானங்களும் பின்பற்றுகின்றன" என்றுத் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 passangers disemberking of plane in spein airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->