எகிப்தில் ரயில் தடம் புரண்டு விபத்து - 2 பேர் பலி, 16 பேர் காயம் - Seithipunal
Seithipunal


எகிப்து தலைநகர் கெய்ரோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தின் நைல் டெல்டாவில் உள்ள மெனூஃப் நகர் நோக்கி பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கலியூப் நகரில் உள்ள ரயில் நிலையம் வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் எகிப்தியன் பவுண்டு வழங்கப்படும் என எகிப்து அரசு தெரிவித்துள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died and 16 injured in train derailment in Egypt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->