இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீன பகுதியில் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதிகளில் ஹமாஸ் மற்றும் ஆயுதமேந்திய குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்த குழுக்களை பயங்கரவாத அமைப்புகளாக இஸ்ரேல் கருதி தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மேற்கு கரையின் பாலஸ்தீனிய பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஜெனின் நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் குற்றவாளியை பிடிப்பதற்காக அதிரடியாக அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்பொழுது, இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய குழுக்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died in israel and Palestine conflict


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->