அமெரிக்காவில் ஏரியில் மூழ்கிய நண்பர்.! காப்பாற்ற முயன்றதில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்த சோகம்.!
2 Indian students drowned lake in America
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள ஓசர்க்ஸ் பகுதியில் வார இறுதியில் நடந்த திருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது ஏரியில் மூழ்கி இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பலியானவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்த 24 வயதான உதேஜ் குந்தா மற்றும் 25 வயதான ஷிவா கெல்லிகாரி என மிசோரி மாநில நெடுஞ்சாலை ரோந்துப் படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மிசோரி மாகாண நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் கூறும்போது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏரியில் நீராடச் சென்ற குந்தா, நீரின் ஆழத்திற்கு சென்ற பின்னர் மேலே வரவேயில்லை என்பதால், அவரது நண்பர் கெல்லிகரி பதற்றமடைந்து, நண்பரை காப்பாற்ற அவரும் நீருக்குள் குதித்துள்ளார்.
இதில் இருவரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களை நீட்டனர் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெலுங்கானாவை சேர்ந்த இருவரும் அமெரிக்காவில் உள்ள மாகாண பல்கலை கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைவாக கொண்டு வருவதற்கான உதவிகளை மேற்கொள்ளும்படி எனது குழுவினரை கேட்டு கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
2 Indian students drowned lake in America