இஸ்ரேல் படையால் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் படையால் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல வருடங்களாக நிலவி வரும் மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் இஸ்ரேல் வீரர்கள் பாலஸ்தீனர்கள் வாழும் மேற்குகரை பகுதியில் பாலஸ்தீன பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக அடிக்கடி அதிரடி தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர். இதுபோன்ற தேடுதல் வேட்டைகளின்போது அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது வழக்கமாகி வருகிறது. 

இந்நிலையில், நேற்று அதிகாலை மேற்குகரை பகுதியில் உள்ள ஜலசோன் நகரில் இஸ்ரேல் வீரர்கள் வழக்கமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் இஸ்ரேல் வீரர்கள் மீது காரை மோதி தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

இதனால் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அந்த கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Palestinians shot dead by Israeli forces


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->