பாகிஸ்தான் || மருத்துவமனையின் மேற்கூறையில் சிதைந்த 200 மனித உடல்கள் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தானில் நகரின் மருத்துவமனை ஒன்றில், பிணவறை மேற்கூரையில் சிதைந்த 200 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலையடுத்து பஞ்சாப் முதல் மந்திரி சவுத்ரி ஜமான் குஜ்ஜரின் ஆலோசகர், மருத்துவமனைக்குச் சென்று, உடல்களை தகனம் செய்ய உத்தரவிட்டு, இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக சிறப்பு சுகாதார செயலாளர் முஸாமில் பஷீர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விசாரணையை முடிப்பதற்காக மூன்று நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கிடையே, மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மரியம் அஷர்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உடல்கள் மாணவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும், உடலகள் வெவ்வேறு மருத்துவ நோக்கங்களுக்காக மேற்கூரையில் வைக்கப்பட்டன என்றும், இது அரசாங்கத்தால் வகுத்துள்ள விதிகளின்படி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

200 decomposed human bodies found in the above hospital in Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->