2021.. கடந்து வந்த பாதை.. உலகம் ஓர் பார்வை.. பார்க்கலாம் வாங்க..!!
2021 flashback
உலகில் முதன்முறையாக ஐ.நா.வின் அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்தது.
குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உலகிலேயே முதன்முறையாக அண்டார்டிக்கா கடல் பகுதியில் மஞ்சள் நிறப் பென்குயின்கள் கண்டறியப்பட்டு அதன் புகைப்படம் வெளியிடப்பட்டது.
சீனாவில் பிபிசி வேல்ட் நியூஸ் தொலைக்காட்சிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
உலகின் முதல் எரிசக்தி தீவை உருவாக்கும் திட்டத்திற்கு டென்மார்க் நாடு ஒப்புதல் அளித்தது.
புகழ்பெற்ற டிஜிட்டல் ஓவியக் கலைஞரான பீப்பிலின் டிஜிட்டல் ஓவியம் சுமார் 501 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
சார்ஜாவில் பெண்களுக்கான பிரத்யேக பூங்கா உட்பட 2 புதிய பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன.
எகிப்து நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் மற்றும் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரலாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
தொடர்ந்து நான்காவது முறையாக சிரியா அதிபராக பஷார் அல் அசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மார்தா கரம்பு கூம் என்பவர் கென்யாவின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆனார்.
உலகிலேயே அதிக வெப்பமான இடம் என்ற பெயரை ஈரானின் லூட் பாலைவனம் தட்டி சென்றது.
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
இங்கிலாந்து நாட்டில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் காலடி தடம் கண்டறியப்பட்டது.