2021.. கடந்து வந்த பாதை.. உலகை சுற்றி பார்க்கலாம் வாங்க..!! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரக அரசின் முக்கிய வர்த்தக அமைப்பில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.யூசுஃப் அலி துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

உலகின் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டது.

 நேபாளத்துக்கு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இந்தியா நன்கொடையாக வழங்கியது.

 செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய ஜூரோங் ரோவர், கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆயிரம் மீட்டர் பயணித்து புதிய மைல்கல் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் பழமையான மழைக்காடுகளை சொந்தம் கொண்டாடும் உரிமை அங்கு வசிக்கும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டது.

ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக முகமது சுகைல் சாகீன் என்பவரை தாலிபான் அரசு அறிவித்தது.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர், மெட்டா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்தார்.

 அமெரிக்காவில் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு பொருத்தப்பட்டு அதன் செயல்பாடு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

 ஆஸ்திரியாவின் புதிய பிரதமராக அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் பதவியேற்றார்.

 சீனா தனது புதிய 'ஆப்டிகல் ரிமோட் சென்சிங்" செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

 ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டது.

 '2021ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க்" என டைம்ஸ் நிறுவனம் அறிவித்தது.

 இந்திய வம்சாவளி நபரான கௌதம் ராகவனை வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பில் நியமித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2021 flashback memories


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->