2024-ன் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2024 nobel peace prize announcement
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக விளங்கி வரும் நோபல் பரிசு விருதுகள் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.
அதன்படி, முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பின்னர் இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோ, ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்திவருவதாகவும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை அந்த அமைப்பு மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வரும் டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
English Summary
2024 nobel peace prize announcement