நாடாளுமன்ற கலவரம்.! ட்ரம்பின் மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய முடிவு.!
3 criminal case to be filed against trump for us parliament riot
அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து தோல்வியை ஏற்க முடியாமல் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
மேலும் நவம்பர் 6ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குவதற்காக பாராளுமன்றம் கூடியபொழுது, ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் வயதானவர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக தனிக்குழு அமைத்து மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் உட்பட பல பேரை விசாரித்து வந்த நிலையில் ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணை முடிவடைந்தையடுத்து, கலவரத்தை தூண்டியதற்காகவும், சட்ட ஒழுங்கை மீறியதற்காகவும் டிரம்பின் மீது மூன்று கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய, நீதித்துறைக்கு விசாரணை தனி குழு பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கலவரம் தொடர்பான முழு அறிக்கைகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும், ட்ரம்பின் மீதான குற்றங்கள் பகிரங்கமாக தெரிவிக்கப்படும் என்றும் அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
3 criminal case to be filed against trump for us parliament riot