மேற்குக்கரை பகுதியில் கத்திக்குத்து தாக்குதல்.! 3 இஸ்ரேலியர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான மேற்குகரை மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலியர்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் இஸ்ரேலின் மேற்குகரை பகுதியில் உள்ள ஏரியல் நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் கியாஸ் நிலையத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்த இஸ்ரேலியர்களை பாலஸ்தீன வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் இஸ்ரேலியர்கள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர். 

இதைத்தொடர்ந்து, கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த ஆண்டில் மட்டும் மேற்குகரை மற்றும் ஜெருசலேம் நகரில் நடந்த வன்முறை சம்பவங்களில் 23 இஸ்ரேலியர்களும், 130 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed in West Bank stabbing attack in isreal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->