இந்தோனேஷியா || கனமழையால் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியாவில் கனமழையால் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்து வருவதால் வடக்கு சிபெட், மேற்கு பெஜாட்டன் மற்றும் பாண்டோக் பினாங் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

மேலும் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் செயல்பட்டு வரும் பள்ளியில் வெள்ள நீர் புகுந்ததால் சுவர் இடிந்து பள்ளி மாணவர்களின் மீது விழுந்ததுள்ளது. இந்த விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து கவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 students died in school wall collapse due to flood in Indonesia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->