வியட்நாம்: மதுபான பாரில் பயங்கர தீவிபத்து.! 32 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் வணிக மையமான ஹோசிமின் நகருக்கு வடக்கே, பின்டுவாங் மாகாணத்தில் உள்ள கரோக்கி மதுபான பாரில் சுமார் 150 பேர் கூடி இருந்தனர். அப்பொழுது அக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் திடீரென தீப்பிடித்து உள்ளது.

தீயானது மலமலவென எரிந்து அனைத்து இடங்களுக்கும் பரவ தொடங்கியது. மேலும் இந்த தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளத்திலிருந்து குதித்தபோது சிலர் மூச்சுத் திணறிக் காயமடைந்ததாகவும், மற்றவர்களுக்கு கை, கால்கள் உடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் கொழுந்துவிட்டு எரிந்த தீயை, வீரர்கள் போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் கழிவறையில் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

32 people died in a terrible fire at a liquor bar in Vietnam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->