இந்திய பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடி கப்பல் - 39 பேர் மாயம்... தேடும் பணி தீவிரம்...! - Seithipunal
Seithipunal


இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கப்பலில் பயணம் செய்த 39 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீனா ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பெங்லாய் ஜிங்லு ஃபிஷரி கோ லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான தொலைதூர நீர் மீன்பிடிக் கப்பல் "லுபெங் யுவான்யு 028" நேற்று இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்து 39 பேர் மாயமாகியுள்ளனர்.

இந்நிலையில், மாயமானவர்களை தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மீட்பு குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் கப்பலில் இருந்த 39 பேரில் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் 4 பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

39 people missing as Chinese fishing vessel capsizes in Indian Ocean


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->