வருகிறது மூன்றாம் உலகப்போர்..கணித்த இந்திய ஜோதிடர்!! - Seithipunal
Seithipunal


மூன்றாம் உங்கப்போருக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன என்று இந்தியாவைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஜோதிடர் குஷால் குமார் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில், "2024ம் ஆண்டு உலகம் முழுவதும் போர் பதற்ற சூழலே நிலவுகிறது. 

கொரிய நாடுகள், சீனா - தைவான், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் சம்பவங்கள், பதட்டமான சூழ்நிலைகளே இதை கணிக்க காரணமாக இருக்கின்றன" என்று ஜோதிடர் குஷால் குமார் கூறியுள்ளார். மேலும் அவர் " சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம். உலகெங்கிலும் அரசியல் எழுச்சி ஏற்படும். அதைத் தடுக்க ராணுவத்தை இறக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக வரும்" என்று கூறும் அவர், ஜூன் 10ம் தேதி மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி பரபரப்பைக் கிளறியுள்ளார். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கூட " 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் மூன்றாம் உலகப்போர் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆனால் அதற்கு முன்பே பாபா வங்கா உள்ளிட்ட பலர் உலகப்போர் குறித்து கணித்து விட்டனர். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இவையெல்லாம் முன்பே கணிக்கப்பட்டவை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd world war Predicted Indian astrologer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->