உக்ரைன்-ரஷ்யா போரால் 40 லட்சம் குழந்தைகள் வறுமையில் பாதிப்பு - ஐநா
40 lakhs children affected by poverty due to Ukraine war
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் தானியம் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி தடைபட்டது. மேலும் மேற்கத்திய மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யா மீதுள்ள விதித்த பொருளாதார தடையால் பன்னாட்டு சந்தைகளில் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இதனால் உக்ரைனின் தானியங்களை நம்பி இருக்கும் மத்திய ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உணவு பற்றாக்குறையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போறால் இதுவரை கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்த அண்டை நாடுகளில் 40 லட்சம் குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்கியுள்ளதால், உக்ரைனில் ஏற்றுமதி தடைப்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளது.
English Summary
40 lakhs children affected by poverty due to Ukraine war