நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி.! 28 பேர் மாயம்...! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கிழக்கு நேபாள மாவட்டங்களான சங்குவசபா, ஹெவாகோலா பஞ்ச்தார் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் மின்கம்பங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மேலும் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் சங்குவாசபா மாவட்டத்தில் ஹேவா ஆற்றின் நீர்மின் கட்டுமானத்தில் பணியாற்றிய 17 ஊழியர்கள் மற்றும் டேப்லெஜங் பகுதியில் குடிசைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 28 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அணைகள் மற்றும் ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed 28 missing in flood and landslides in nepal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->