பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 50 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜாரினில் உள்ள கார் பகுதியில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) கட்சியின் தொழிலாளர்கள் மாநாடு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் குவிந்திருந்தனர். இந்த கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பங்கேற்க இருந்த நிலையில் அவர் வருவதற்கு முன்பு வெடிகுண்டு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலாக நடந்திருக்கலாம் என பாகிஸ்தான் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கோர சம்பவத்தில் தற்போது வரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 killed in bomb blast in Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->